Wednesday, April 11, 2007

Lasith Malinga - Srilankan Lion that roared

WC 2007 - இலங்கை vs தென்னாபிரிக்கா

முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்கத்திலேயே தரங்காவை இழந்தது, ஸ்கோர் 13/1. துல்லியமாக பந்து வீசும் போலாக்கிற்கு, அவரது துல்லியேமே எதிரியானது! அவர் பந்து வீசும் முறை predictable ஆக இருப்பதாலும், இப்போது வேகமும் குறைந்து விட்டதாலும், ஜெயசூர்யாவின் ·பேவரட் பந்து வீச்சாளர் ஆனார். நான்கு பவுண்டரிகள் அடித்ததில், போலாக் 4 ஓவர்களில் கொடுத்தது, 32 ரன்கள்.

ஜெயசூர்யாவின் ரூபத்தில் வந்த ஆபத்து, லாங்கெவெல்ட்டின் பந்தில் விலகியது. ஜெயசூர்யா அவுட்! ஸ்கோர் 45/2.

ஜயவர்த்தனாவும் ஸ்கோர் 65 ரன்கள் இருந்தபோது, விக்கெட்டை இழந்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த சங்கக்காராவும், சமரசில்வாவும், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க ஸ்கோர் 98-5, 24.1 ஓவர்களில். சமரசில்வாவை கிப்ஸ், ஸ்டம்ப் மேல் பாய்ந்து ரன் அவுட் செய்த காட்சி, கண்ணிலேயே நிற்கிறது. அடுத்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் (97 ரன்கள்), தில்ஷனுக்கும் ஆர்னால்டுக்கும் இடையே மலர்ந்தது. இருவருமே அரை சதம் அடித்தனர்.

இன்னிங்க்ஸின் இறுதியில், 1 ரன்னில் 4 விக்கெட்டுகள் கும்பலாக விழ, இலங்கை 49.3 ஒவர்களில், 209 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது! தென்னாபிரிக்காவின் அன்றைய நட்சத்திர பந்து வீச்சாளர் லாங்கவெல்ட், 10-1-39-5

தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிகா, டிவிலியர்ஸை சாமிந்தாவின் முதல் ஓவரிலேயே (clean bowled) இழந்தது. வாஸ் அற்புதமாக பொறி வைத்து இந்த விக்கெட்டை, இன்னிங்க்ஸின் முதல் ஓவரின் ஆறாவது பந்தில் பறித்தெடுத்தார்!!! ஒரு கட்டத்தில், வாஸின் bowling figures, 6-0-9-1. அவர் பந்து வீச்சை சமாளிக்க ஸ்மித் பயங்கரமாகத் தடுமாறியதை பார்க்க முடிந்தது. போகப் போக, ஸ்மித் தைரியமாக அடித்து ஆடினார்.

ஸ்மித்தும், காலிஸ¤ம் ஜோடி சேர்ந்து, ஸ்கோர் 95 ரன்கள் (17.2 ஓவர்கள்) வரும் வரை, கவனமாக ஆடினர். முரளியின் பந்து வீச்சில், 18வது ஓவரில், staumped அவுட் ஆனார். ஸ்மித் எடுத்த ரன்கள் 59. ஸ்மித்தும் காலிஸ¤ம், மற்ற பேட்ஸ்மன்களுக்கு, நல்ல ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர் என்றால் அது மிகையாகாது.

25வது ஓவரின் முடிவில், தென்னாபிரிக்கா ஸ்கோர் 134/2, எட்டு விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், வேண்டிய ரன் ரேட் 3.04 மட்டுமே, இலங்கை அணி தோல்வியை எதிர் நோக்கியே பந்து வீசிக் கொண்டிருந்தது என்று கூறலாம்! ஸ்கோர் 160 என்ற நிலையில், முரளியின் பந்து வீச்சில், கிப்ஸ் மற்றும் பவுச்சர் தொடர்ந்து அவுட் ஆக, ஸ்கோர் 160-4, இலங்கைக்கு சற்று புத்துயிர் பெற்றது! முரளி எடுத்த caught and bowled விக்கெட் (கிப்ஸ்) அற்புதம்!

ஜெயசூரியாவும் அடுத்த பக்கத்திலிருந்து, முரளிக்கு அருமையான சப்போர்ட் கொடுத்தார். 38வது ஓவரில், ஜெயசூர்யாவின் பந்தில் ஜஸ்டின் கெம்ப் stumped out ஆகி விக்கெட் இழந்தார், ஸ்கோர் 182-5. இலங்கை இன்னும் கொஞ்சம் புத்துயிர் பெற்றது. ஆனால், காலிஸ் திடமாக, நம்பிக்கை அளிக்கும் விதத்தில், ஆடிக் கொண்டிருந்தார். அடுத்த ஓவரில், மலிங்கா காலிஸ் கொடுத்த ரிடர்ன் கேட்சை தவற விட்டது, தென்னாபிரிக்காவுக்கு பெரிய சாதகமாகியது.

காலிஸ¤ம், போலக்கும், ஸ்கோரை 206 ரன்கள் (44.5) வரை, நிதானமாக ஆடி, எடுத்து வந்தனர். 45வது ஓவரின் ஐந்தாவது பந்தை, மலிங்கா ஒரு slower one ஆக வீச, அந்த ஓவரில் 6 ரன்கள் எடுத்த போலாக், CLEAN BOWLED. ஸ்கோர் 206-6. அப்புறம் நடந்தது வரலாறு! ஓவரின் கடைசிப் பந்தில், ஹாலும், ஒரு slower one மூலம் CLEAN BOWLED. ஸ்கோர் 206-7. இலங்கைச் சிங்கங்கள் கர்ஜிக்கத் தொடங்கின.

46வது ஓவரை வாஸ் வீசி, பீட்டர்ஸனை படாத பாடு படுத்தி, அந்த ஓவரில் ஒரு ரன்னே தந்தார். ஸ்கோர் 207-7! 4 ஓவர்களில், 3 ரன்களே தேவை, காலீஸ் இன்னும் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், 47வது ஓவரை வீசப் போகிறவர் மலிங்கா ஆயிற்றே!

47வது ஓவரின் முதல் பந்தில், காலீஸ் அவுட்!!! ஆ·ப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட அதி வேகப்பந்தை, காலிஸ் தொட, சங்கக்காரா டைவ் அடித்து, ஒரு மகத்தான காட்ச் பிடித்தார்!!! மலிங்காவுக்கு ஹாட்ரிக் (HATRICK) கிடைத்து விட்டது. ஆனால், இலங்கைக்கு இன்னும் வெற்றிக் கனி கிட்டவில்லையே! ஸ்கோர் 207-8, சிங்க கர்ஜனை தொடர்ந்து கேட்டது :)

பலியாடு போல ஆடுகளத்திற்கு வந்த நிதினி, ஓவரின் இரண்டாவது பந்தில் (a superb yorker) தனது நடு ஸ்டம்பை பரிதாபமாக இழந்து பெவிலியன் திரும்பினார். ஸ்கோர் 207-9, ஒரு ரன்னில் 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன! (மலிங்காவுக்கு நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள், இது ஒரு உலக ரெகார்ட்!) பேரிரச்சலைத் தொடர்ந்து ஸ்டேடியத்திலிருந்த ரசிகர்கள் அடுத்த பந்துக்குத் தயாரானார்கள்.

வலுவில்லா இதயம் கொண்டோர் பார்க்கக் கூடாத ஆட்டம் இது! லாங்கவெல்ட் ஒரு ரன் எடுத்து, மலிங்காவிடமிருந்து தப்பித்து, அந்தப் பக்கம் ஓடினார். ஓவரின் கடைசிப் பந்து, பீட்டர்ஸன்னின் ஆ·ப் ஸ்டம்ப்பை மயிறிழையில் தவற விட்டு, சங்கக்காராவின் கையுறைகளில் சரணடைந்தது. பீட்டர்ஸன்னும், தென்னாபிரிக்காவும், பிழைத்தன! ஸ்கோர் 208-9. 2 ரன்கள் தேவை, 3 ஓவர்களில்!

அடுத்த வாஸ் (அவரது கடைசி ஓவர் அது) ஓவரிலும், தீப்பொறி பறந்தது. லாங்க்வெல்ட் என்னவெல்லாமோ செய்து பார்த்தார். ஆனால், பந்து தான் பேட்டில் படவில்லை. Maiden over, really an over from HELL! ஸ்கோர் 208-9, 2 ரன்கள் தேவை, 2 ஓவர்களில்! வாஸ் 10-1-31-1

49வது ஓவரில் மலிங்கா vs பீட்டர்ஸன்! மலிங்கா வீசிய முதல் பந்து, அதி வேகமாக, பேட்டில் படாமல், விக்கெட் கீப்பரிடம் சென்றது. இரண்டாவது பந்து, பேட்டின் ஓரத்தில் பட்டு .................... அதி வேகமாக பவுண்டரியை அடைய, anti-climax ஆக தென்னாபிரிக்கா வெற்றி, 48.2 ஓவர்களில், It was ALL OVER!

அன்று தோற்றிருந்தாலும் கூட, இலங்கையின் fighting spirit-ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும்! 210 என்ற மிகக் குறைந்த இலக்கை, அவர்கள் defend செய்த விதம் அருமையிலும் அருமை. இன்னும் ஒரு 25 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால், இலங்கை மிக நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.

இலங்கை உலகக் கோப்பையை வென்றால், எனக்கு மகிழ்ச்சி தான் :)


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 330 ***

7 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

தென்றல் said...

ரொம்ப ரசிச்சி எழுதிருக்கீங்க, பாலா!

நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது.

அருமையான "த்ரில்லிங் ரிப்போட்". மிக்க நன்றி!

enRenRum-anbudan.BALA said...

புயலை ஒத்த மேட்ச் குறித்து தென்றலின் கமெண்ட்டுக்கு நன்றி :)))

A Simple Man said...

நல்ல பதிவு,
இதேபோல இங்கிலாந்து‍‍இலங்கை மேட்ச் பற்றிய பதிவு எழுதுவீர்களா பாலா?

இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க‌ வேண்டிய‌ மேட்ச் அது..

enRenRum-anbudan.BALA said...

Thanks, Abul.

//இதேபோல இங்கிலாந்து‍‍இலங்கை மேட்ச் பற்றிய பதிவு எழுதுவீர்களா பாலா?
//
Pl. check http://balaji_ammu.blogspot.com/2007/04/wc-2007.html

A Simple Man said...

Thanks Bala..

said...

Well written article.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails